♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
யாத்ரி கட்குப் பாதை காட்டும் தாரகையே
என்றும் கன்னித் தாயே எம் தஞ்சமே வாழ்க
ஆவே ஆவே ஆவே மரியே
1. தேவ தூதன் சொன்ன தேவ வாழ்த்தை ஏற்று
ஏவை பேரை மாற்றும் ஜீவ இன்பம் ஊற்றும்
2. பாவ இருள் போக்கி தேவ ஒளி யாக்கி
ஆவியின் நோய் தீரும் ஜீவ வரந் தாரும்
3. தாயாய் உம்மைக் காட்டும் சேயாய் நீரே ஈந்த
சேசு எம் மன்றாட்டை நேசமாக ஏற்க
4. தன்ம நிறை கன்னி சாந்த குணத்தாயே
தின்மை போக்கிச் சாந்த நன்மை கற்பு நல்கும்
5. நித்தம் இயேசு பாதம் நேசித்தே நாம் காண
சுத்த வாழ்வு தாரும் மெய்ப் பாதையிற்சேரும்
6. தந்தை தேவனார்க்கும் மைந்தன் சேசுவுக்கும்
சந்த ஸ்பிரீத்தோடு சந்ததம் வாழ்த்தாமே
7. மாசில்லாக் கன்னியே மாதாவே உம்மேல்
நேசமில்லாதவர் நீசரே ஆவார்