பதுவைத் திருமுனியே புதுமைகள் புரிபவரே புவியினில் எமைக் காரும் பரகதி எமைச் சேரும்


பதுவைத் திருமுனியே புதுமைகள் புரிபவரே

புவியினில் எமைக் காரும் பரகதி எமைச் சேரும்


1. கரங்களில் இயேசுவை ஏந்தி நின்றாய் - அவர்

வரங்களை வாரியே வழங்குகின்றாய்

மலையாய் வந்திட்ட துன்பமெல்லாம் - சிறு

அலையாய் அமைந்திடச் செய்கின்றாய்


2. அலகையை அடக்கி ஆள்பவரே - அதன்

அடிமையை மீட்டுக் காப்பவரே

இருளதன் ஆட்சி நீங்கிடவே - எழில்

அருளதன் ஆட்சி ஓங்கிடவே