தேவன் தந்த தேவி நீ தெய்வீக புவனராணி நீ தேனோர் தம் புகழும் வாணி நீ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தேவன் தந்த தேவி நீ தெய்வீக புவனராணி நீ

தேனோர் தம் புகழும் வாணி நீ

தெய்வம் நீ என் தாயும் நீ


1. கற்பின் நிறை பொற்கலசம் நீ கருணை வடிவம் நீ

கர்த்தரைத் தாங்கிய கவசம் நீ கன்னியும் தாயும் நீ

தெய்வத்தின் தெய்வம் அம்மா தேற்றிடும் அன்னையம்மா


2. சத்திய வேத உத்திரம் நீ சாஸ்வத பொக்கிஷம் நீ

சர்வலோகாதி இராக்கினி சகாய அன்னை நீ

இன்முக காட்சி தனை என்றென்றும் நீ அருள்வாய்