பரலோகத் தந்தாய் முதல்வனே சரணம் எங்களைப் படைத்த தந்தையே சரணம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பரலோகத் தந்தாய் முதல்வனே சரணம் - 2

எங்களைப் படைத்த தந்தையே சரணம் - 2

கறைகளைப் போக்கும் இறைவனே சரணம் - 2

கரம் கூப்பி பணிந்தோம் சரணம் சரணம்

பரலோகத் தந்தாய் முதல்வனே சரணம்


1. புவிமீட்க வந்தாய் புதல்வனே சரணம் - 2

எங்களை இரட்சித்த இதயனே சரணம் - 2

சிலுவையில் மரித்து உயிர்த்தவா சரணம் - 2

சிரம் தாழ்த்திப் பணிந்தோம் சரணம் சரணம்

புவிமீட்க வந்தாய் புதல்வனே சரணம்


2. அன்பாகி நின்றாய் ஆவியே சரணம் - 2

எங்களை அர்ச்சிக்கும் அமுதனே சரணம் - 2

கண்போல காத்திடும் அண்ணலே சரணம் - 2

மனம் வாழ்த்தி அழைத்தோம் சரணம் சரணம்

அன்பாகி நின்றாய் ஆவியே சரணம்


3. பரலோகத் தந்தாய் முதல்வனே சரணம் - 2

புவிமீட்க வந்தாய் புதல்வனே சரணம் - 2

அன்பாகி நின்றாய் ஆவியே சரணம் - 2

முதல்வனே புதல்வனே ஆவியே சரணம்

பரலோகத் தந்தாய் முதல்வனே சரணம்