உயிருள்ள தேவா உமக்கொரு பாடல் உண்மையின் நாதா பாடுகின்றோமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உயிருள்ள தேவா உமக்கொரு பாடல்

உண்மையின் நாதா பாடுகின்றோமே

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை

அமைதியின் தூதா இது எம் கீதம்

இயேசுவே நாதா தீருமெம் தாகம்

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை


1. பாதைகள் தவறி நாங்கள் சென்றிடும் போது

உம் பாதைக்கு எம்மை அழைத்தாயே

தீமைகள் எம்மைச் சூழ்ந்திடும் போது

உம் தூய நல் ஆவி அளிப்பாயே

அடைக்கலப் பாதையே இறைவா

உம் பாதத்தில் பணி செய்ய வரம் தருவாய்

ஆராதனை உயிருள்ள ஆராதனை


2. அன்பினை இழந்து நாங்கள் அலைகின்ற போது

நல் அருளினை எமக்கு அருள்வாயே

உறவினை மறந்து நாங்கள் வாழ்கின்ற போது

உம் உறவினில் நிலைக்கச் செய்வீரே

வல்ல எம் தேவனே இறைவா

எம் வாழ்வுக்கு வழிதனைக் காட்டிடுவாய்

உயிருள்ள அமைதியின் ஆராதனை