இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான் உலகத்தின் இறைவன் இயேசுபிரான்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்

உலகத்தின் இறைவன் இயேசுபிரான்


1. ஆற்றலும் அவரே அமைதியும் அவரே

அன்புக்குத் தலைவன் இயேசுபிரான்

அடைக்கலம் என்று புகுந்தவர் நெஞ்சில்

அருளாய் நிற்பவர் இயேசுபிரான்

அனுதினம் அவரைத் தொழுதவர் உயிரை

பயிர் போல் வளர்ப்பவர் இயேசுபிரான்


2. உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதத்தை அறுத்து

உலகத்தில் வாழ்ந்தவர் இயேசுபிரான்

மாணிக்க உலகில் மனிதனாய் தோன்றி

மக்களைக் காப்பவர் இயேசு பிரான்