கருணையே இறைவா உம் கரங்களில் தவழ்ந்தேன் பரமனே முதல்வா உம் பதமலர் பணிந்தேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கருணையே இறைவா உம் கரங்களில் தவழ்ந்தேன்

பரமனே முதல்வா உம் பதமலர் பணிந்தேன்

ஏற்றிடுவாய் ஏற்றிடுவாய் உமதாக மாற்றிடுவாய்


1. கோதுமை அப்பத்தையே உம்

தாள்களில் படைத்து நின்றேன் - உம்

உடலாக இவை மாறவே நான்

அருள்தனை வேண்டி வந்தேன்

உடல் பொருள் அனைத்தையும்

உவப்புடன் அளிக்கின்றேன் இதை ஏற்றிடுவாய்


2. திராட்சை இரசத்தினையே உம்

திருவடி படைத்து நின்றேன்

உம் இரத்தமாய் இவை மாறவே நான்

இரக்கத்தை வேண்டி நின்றேன்

அமைதியின் மன்னனே நீதியின் கதிரோனே

எனை ஏற்றிடுவாய்