இயேசுவின் இறை இரக்கம் - எங்கள்
இறைவனின் பேரிரக்கம்
எல்லையில்லா இரக்கம் உலகம்
எங்கும் நிறை இரக்கம்
ஆழம் அகலம் நீளம் காண முடியாத
அளவில்லாத இரக்கம் இரக்கம்
1. காலம் முழுவதும் காத்திடும் இரக்கம்
காலம் கடந்த இரக்கம்
பாவம் மன்னிக்கும் பரிவுள்ள இரக்கம்
உறவை வளர்க்கும் இரக்கம்
அன்பில் அணைக்கும் இரக்கம்
அணைத்து வாழ வைக்கும் இரக்கம்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடாதது
நித்திய கால இரக்கம் இரக்கம்
2. கோபம் காட்டிடத் தயங்கும் இரக்கம்
கனிவு நிறைந்த இரக்கம்
கடிந்து கொள்ளாத தயவான இரக்கம்
பொறுமை உள்ள இரக்கம்
நம்மில் கலந்த இரக்கம்
நம்மைப் பிரிந்திடாத இரக்கம்
என்ன நேரிடினும் என்றும் துணை வரும்
உயிரில் கலந்த இரக்கம் இரக்கம்