தீனதயாளா இயேசுநாதா சேவையில் நீதியின் காவலனே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தீனதயாளா இயேசுநாதா

சேவையில் நீதியின் காவலனே

தினம் உனைப் பாடும் மனம் தாராய்

திருவருள் வாழ்வில் எமை சேராய்


1. மாபெரும் சீலனே பேருபகாரனே

மாசில்லா கருணைதனை வளர்த்திட்ட அருள் அரசே

வான் மழையாய் வந்தே எமையே

மகிழ்வுடன் ஏற்று துயர் தீராய்

தீனதயாளா இயேசுநாதா


2. ஞான சிங்காரனே ஏழைப் பங்காளனே

வானமும் வையகமும் வணங்கிடும் திருவடிவே

வாழ்வில் உனை அன்பாய் பணிந்தே

மனத்துயர் நீக்கும் எழில் தாராய்

தீனதயாளா இயேசுநாதா