கலைமான் நீரோடைகளை ஆர்வமுடன் நாடி
செல்வது போல் இறைவா என் நெஞ்சம் உம்மை
ஆர்வமுடன் நாடிச் செல்கின்றது
1. இறைவன் மீது உயிருள்ள இறைவன் மீது
என் உள்ளம் தாகங்கொண்டது என்று செல்வேன்
இறைவன் முகத்தை என்று காண்பேன்
2. மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து அவர்களை அழைத்துக்
கொண்டு இறைவனின் இல்லத்திற்குச் சென்றேனே
அக்களிப்பும் புகழிசையும் முழங்க
விழாக் கூட்டத்தில் நடந்தேனே
இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது, என் உள்ளம் உருகுகின்றது.
3. உமது ஒளியை வீசியருளும்
உமது உண்மையைக் காட்டியருளும்
அவையே என்னை வழிநடத்தி உமது புனித மலைக்கும்
உறைவிடத்திற்கும் கொண்டு சேர்க்கும்
4. இறைவனின் பீடத்திற்குச் செல்வேன்
எனக்கு அகமகிழ்வும்
அக்களிப்பும் தரும் இறைவனிடம் செல்வேன்