♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் ஒருமை
யாவருமே ஓர் குலமாய் பாரினிலே வாழ்ந்திடவே
1. கோதுமை கதிர்மணி போல் தீதிலா குணநலன்கள்
கோதுவாய் சேர்ந்திடவே
தூயனே அருள்மழை பொழிவாய்
2. திராட்சைக் கனிரசமே தெய்வீக பானமதாய்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கொரு புதுமுகம் நல்கிடுவாய்
3. சுவைமிகு வானமுதே திகட்டாத தேன்சுவையே
தித்திக்கும் கிருபையினால்
எங்களை மார்பினில் அணைத்துக் கொள்வாய்
4. தீயினில் பாகெனவே தினம் உமதன்பாலே
தாய் மனம் போல் அருளி
தாரணி செழித்தோங்கிடவே