பாடுவாய் என் நாவே மாண்பு மிக்க உடலின் இரகசியத்தை பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர் தாம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பாடுவாய் என் நாவே மாண்பு

மிக்க உடலின் இரகசியத்தை

பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர் தாம்

பூதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லாதுயர்ந்த

தேவ இரத்த இரகசியத்தை எந்தன் நாவே பாடுவாயே


1. அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னி நின்று

நமக் கென்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து

அரிய தேவ வார்த்தை யான வித்து அதனை விதைத்த பின்னர்

உலக வாழ்வின் நாளை மிகவே

வியக்கும் முறையில் முடிக்கலானார்