♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
பலிபீடத்தில் என்னை பரனே
படைக்கின்றேனே இந்த வேளை
அடியேனைத் திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுமே
கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திருஇரத்தத்தால் கறை நீக்க இருதயத்தை
1. நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி
2. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல் இந்நிலத்தில் கண்டதால்