மனுமக்களின் தந்தையே, இந்தப் பிள்ளைகளை எனக்குக் கொடுத்து என் வசத்தில் வைத்து உமக்கு ஏற்புடையவர்களாய் நடத்தவும், அவர்களை நித்திய சீவியத்திற்கு கொண்டுவரவும் செய்தீரே. இந்தப் பரிசுத்த ஊழியத்தையும் உக்கிராண காரியத்தையும் நிறைவேற்ற எனக்கு உதவியாக உமது ஞான வரத்தைத் தந்தருளும். நான் அவர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அதையும், எதை நிறுத்த வேண்டுமோ அதையும் கற்பியும். எப்போது கண்டிக்க வேண்டியதோ அப்போது கண்டிக்கவும், எப்போது அரவணைக்க வேண்டியதோ அப்போது அரவணைக்கவும் செய்வீராக. இன்னமும் சாந்தகுணத்தில் என்னைப் பலப் படுத்தியருளும். அவர்கள் பேரில் கவலையும், சாக்கிரதையுமுள்ளவனாயிருக்கவும், அதைப் பிள்ளைக்கு இளக்காரங் கொடுக்கிறதிலும், அதிகமாய்த் தண்டிக்கிற மூடத்தனத்திலிருந்தும் என்னை விடுவித்தருளும். வார்த்தையாலும், நடத்தையாலும் அவர்களை ஞானத்திலும், பக்தியிலும் கூர்மையாய் நடத்த எனக்கு உதவி செய்யும். அதனால் மோட்சவீடாகிய பரம இராச்சியத்தில் பிதாவோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் இராச்சியபாரம் செய்து நாங்கள் அளவறுக்கப் படாத நித்திய பேரின்ப பாக்கியத்தை அனுபவிக்கச் சேர்த்துக் கொள்ளும்.
ஓ மோட்சவாசிகளுடைய பிதாவே! என் பிள்ளைகளை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். நீர் அவர்களுடைய கடவுளாகவும் தகப்பனாகவுமிரும். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய ஞான வரங்களைத் தந்தருளுவதுடன், என் வசத்தில் வைத்திருக்கும் பிள்ளைகள் இவ்வுலக தந்திரங்களை ஜெயிக்கவும், சத்துராதியின் உள்ளிந்திரிய வெளியிந்திரிய சோதனைகளை எதிர்க்கவும், பசாசின் கண்ணிகளினின்று அவர்களை விடுவிக்கவும் தயை புரியும். அவர்கள் இருதயத்தில் உமது வரப்பிரசாதத்தைப் பொழிந்து இஸ்பீரீத்துசாந்துவின் கொடைகளைக் கொடுத்தருளும். அந்த அருளினால் அவர்கள் எங்கள் ஆண்டவரான சேசு கிறீஸ்து நாதரிடத்தில் உயரவும் கடவார்கள். அப்படியே அவர்கள் விசுவாசத்தோடு உமக்கு ஊழியஞ் செய்தபின், உம்மோடும் இஸ்பிரீத்துசாந்து வோடும் இராச்சியபாரம் செய்கிற எங்கள் ஆண்டவரான சேசுகிறீஸ்துநாதருடைய பேறுபலன்களின் மூலமாய் மோட்ச இராச்சியத்திலே உமது சமூகத்தில் வந்து ஆனந்த பாக்கியத்தை அடையக்கடவார்கள், ஆமென்.