♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
எபிரேயர்களின் சிறுவர் குழாம்
வழியில் ஆடைகள் விரித்தவராய்
தாவீதின் மகனுக்கு ஓசான்னா
ஆண்டவர் பெயரால் வருகிறவர்
ஆசி நிரம்பப் பெற்றவரே
என்று முழங்கி ஆர்ப்பரித்தார்
1. மக்களினத்தாரே நீங்கள் யாவரும் கைக்கொட்டுங்கள்
அக்களிப்போடு இறைவனுக்குப் புகழ்பாடி ஆர்ப்பரியுங்கள்
ஏனெனில் ஆண்டவர் உன்னதமானவர் அஞ்சுதற்குரியவர்
உலகுக்கெல்லாம் பேரரசர்
2. மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார்
நாடுகளை நமக்கு அடிபணிய வைத்தார்
நமக்கு உரிமைப் பொருளாக நாட்டைத் தேடித்தந்தார்
தாம் அன்பு செய்யும் யாக்கோபுக்கு
அது பெருமை தருவதாகும்
3. மக்கள் ஆர்ப்பரிக்க இறைவன் அரியணை ஏறுகிறார்
எக்காளம் முழங்க ஆண்டவர் எழுந்தருளுகின்றார்
பாடுங்கள் இறைவனுக்குப் புகழ்பாடுங்கள்
ஏனெனில் கடவுள் உலகுக்கெல்லாம் அரசர்
அவருக்கு இன்னிசை எழுப்புங்கள்
4. நாடுகள் அனைத்தின் மீதும் இறைவன் ஆட்சி புரிகின்றார்
தம் புனித அரியணை மீது இறைவன் வீற்றிருக்கின்றார்
ஆபிரகாமின் இறைமக்களோடு புற இனத்தாரின்
தலைவர்கள் கூடியிருக்கின்றனர் - ஏனெனில்
உலகின் தலைவர்களெல்லாம் இறைவனுக்குரியவர்கள்
அவரே மிக உன்னதமானவர்