♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மாதா நீயே அருள்வெள்ளமே கன்னிமேரி திருக்கோலமே
எங்கள் மாதா நீயானதால்
உலகம் எங்கும் உயிர் வந்ததே
1. திருச்செல்வன் தனைக்காக்க நீ பட்ட பாடு
இரவோடு இரவாக சிறு பிள்ளையோடு
தாய்மையின் பூரண உணர்ச்சிகளோடு
தாங்கி நடந்ததினால் பிழைத்தது நாடு
2. ஒவ்வொரு வீட்டினிலும் உன் போலத் தாயும்
ஒவ்வொரு தாயிடத்தும் அவர் போல சேயும்
வந்து பிறந்து விட்டால் துன்பங்கள் ஏது
மாதா நீ சொல்லு மகனிடம் தூது