முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகிறேன் இறைவா உன் முன்னிலையில் மண்டியிட்டுக் கிடக்கிறேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகிறேன் இறைவா

உன் முன்னிலையில் மண்டியிட்டுக் கிடக்கிறேன் இயேசய்யா (2)


1. நானே உயிர்தரும் ஊற்று என்ற

வார்த்தையின் பொருள் என்னவோ (2)

உம் ஊற்றில் பருகும் எனக்கென்றும்

இறப்பில்லையோ இருள் இல்லையோ தாகம் இல்லையோ


2. நானே உயிர்தரும் உணவு என்ற

வார்த்தையின் பொருள் என்னவோ (2)

உம் உடலை உண்ணும் எனக்கென்றும்

பசியில்லையோ துயர் இல்லையோ இறப்பில்லையோ