♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையைச் சுமக்கும் தெய்வமே (2)
1. குற்றம் எதுவும் இல்லா தேவனே
எம் குறையைத் தீர்க்கவே மரணம் ஏற்றீரே
பிறர் சுமத்தும் குற்றத்தைச் சுமக்க அருள் தாரும்
2. பாரச் சிலுவையோ எம் பாவச் சிலுவையோ
நீர் சுமந்தது எம்பாவச் சிலுவையோ
உன் உள்ளம் உடைந்ததோ எம்பாவ வாழ்க்கையால்
3. உலகின் பாவமோ சிலுவை வடிவிலே
நீர் தோளில் சுமக்கவே தளர்ந்து வீழ்ந்தீரே
எம் பாவச் சுமையினால் உன் உள்ளம் உடைந்ததோ
4. உடலோ இரத்தத்தால் உருவில்லாமலே
எதிர் கொண்டாள் அன்னை ஏதும் பேசாமல்
அவர் உள்ளம் துடித்ததோ அன்பு தாயின் வருகையால்
5. மனித வாழ்க்கையை உயர்த்தும் சிலுவையை
மறுக்க முடியாமல் சீமோன் வருந்தி சுமந்தாரே
பிறரன்பு பணியிலே நிலைக்க அருள் செய்வீர்
6. துகள் படிந்த உம் திருமுகத்தையே
துணிந்த வெரோணிக்காள் துடைக்க வந்தாளே
நிலையாய் பதிந்ததோ உம் வதனம் துணியில்
7. புழுதி வீழ்ந்து எம் பாவ பளுவினால்
நீர் மீண்டும் எழுந்தது எம்மை மீட்கவே
உன் உள்ளம் உடைந்ததோ என் பாவ வாழ்க்கையால்
8. வருந்தும் மகளிருக்கு மொழி நீர் நல்கினீர்
பாவிகள் நாங்களும் வருந்த வரம் தா
பொங்கும் கடல் போல உம் அன்பை அறிவாரோ
9. மூன்றாம் முறையாக நிலத்தில் வீழ்ந்தீரே
கால் ஊன்றி நடந்திடும் நிலையும் தளர்ந்தீரே
என் அன்பு தேவனே எம் வாழ்வை மீட்கவா
10 உடைகள் களைந்திட உம்மைக் கொடுத்தீரே
மடைதிறக்கும் வெள்ளம் போல் உதிரம் சொரிந்தீரே
யாம் தூய்மையில் வாழ எமக்கு அருள்தாரும்
11. மூன்று ஆணிகள் உம்மைத் துளைக்கவே
மீளாத் துயரினில் நீர் நொந்து வருந்தினீர்
உதிரம் வடிந்ததால் உம்மை ஈந்தீரே
12. இன்னுயிர் அகன்றது இருளில் ஆழ்ந்தது
இயற்கை சீற்றமும் மரணம் அறிவித்தது
உம் அன்பாம் உயிரையே எமக்காய் ஈந்தீரே
13. துயருற்றுத் துடிக்க உள்ளம் நைந்திட
ஊயிரற்ற உடலை அன்னை சுமந்திட
ஆறாத் துயரினால் உம் அன்னை வருந்தினாள்
14. ஒடுங்கிய உடலோ துணியால் பொதிந்திட
நீ அடங்கிய கல்லறை உமக்குச் சொந்தமல்ல
எம்பாவ செயல்களை அடக்க வரம் தாரும்