காணார் மலரே கற்பகமே கருணை வான்முகிலே தினம் கோடி உன் புகழ்பாட

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


காணார் மலரே கற்பகமே கருணை வான்முகிலே

தினம் கோடி உன் புகழ்பாட

என் மனம் வேண்டி அழைக்குமே

வினை தானும் அகலுமே - ஆவே


1. ஆயிரம் கோடி ஆதவன் ஒளியைத்

தாங்கிய முகமன்றோ

நிறை ஆலயம் மேவியே ஆசனம்

கொண்டவள் அழகுத் தாயன்றோ

பூத்திடும் புன்னகை பூவிதழ் ஓரங்கள்

சொல்லுவ தென்னென்னவோ

உயர் பாசம் உதிரும் உன் பார்வையுமே

எம்மை பாதங்கள் சேர்த்திடவோ - உந்தன்


2. மங்கை அருள் அதி சுந்தரமே ஜெபமாலை மந்திரமே

திருமந்திர மாநகர் கோவில்

எழுந்த நல் மாணிக்க மகுடமே

அன்புக்கரம் கொண்டு ஆகிய

நாள் முதல் ஆதரவானவளே

அருள் இன்முகம் காட்டி தாயெனக் காத்திடும்

தஸ்நேவிஸ் மாமரியே - திவ்ய