பாதங்களைக் கழுவினார் இயேசு பாதங்களைக் கழுவினார்


பாதங்களைக் கழுவினார்

இயேசு பாதங்களைக் கழுவினார்

பன்னிரு சீடரைப் பந்தியிலமர்த்தி

தன்னிரு கைகளில் தண்ணீர் கொண்டு


1. தான் என்ற குணத்தால் தனதென்ற மனத்தால்

தலைக்கனம் மீறிட இடமளிக்காமல்

வாக்கிலும் செயலிலும் தாழ்ச்சியைக் கொண்டு

நோக்கிலும் வாழ்விலும் உயர்வோம் என்று(ணர்த்த)


2. பணிவிடை பெறவே வரவில்லை நானும்

பணிவிடை புரியவே உம்மிடை வந்தேன்

என்றவர் சொன்ன வார்த்தையின் படியே

இன்றவர் தாம் ஒரு ஊழியர் போல


3. உள்ளத்தின் பணிவு செயல்களில் தெரிந்தால்

உலகமே நம்மை மதிப்புடன் நோக்கும்

உறவினில் பகைமை மறைந்தே போகும்

உன்னத வாழ்வும் அமையும் என்று(ணர்த்த)