♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
முத்தமிழ் தலைவன் மூவொரு இறைவன் எழுந்து வருகின்றார்
என் நெஞ்சத்தில் நிறைந்து சிந்தையில் கனிந்து
இனிமை பொழிகின்றார் என் இறைவன் வருகின்றார்
1. பாவத்தின் பிடியில் தவித்திடும் நிலையில்
பாவியைத் தேடிவந்தார் - தன்
உடலையே அளித்து விடுதலை அளித்து
உயிராய் மாறுகின்றார்
எல்லையில்லாத அன்பினைப் பொழிந்து
என்னைக் காக்கின்றார் என் இறைவன் வருகின்றார்
2. வாழ்வினை இழந்து வாடியே உலர்ந்த
உள்ளத்தில் உறைகின்றார் - அங்கு
வறட்சியை நீக்கி வளமையை ஈந்து
வாழ்வாய் மாறுகின்றார்
எண்ணில்லாத அருளினால் என்றும்
என்னை ஆளுகின்றார் என் இறைவன் வருகின்றார்