உலகத்தின் பாவங்களைப் போக்குகிற மாசற்ற செம்மறிப் புருவையாகிய இயேசுவே!

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உலகத்தின் பாவங்களைப் போக்குகிற மாசற்ற செம்மறிப் புருவையாகிய இயேசுவே! அனந்த பக்தி வணக்கத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். திவ்விய பூசை நேரத்திலும் உமது திருச் சமுகத்திலே பாவிகளால் சம்பவிக்கும் அநாசாரம், தகாத பார்வை, மரியாதையில்லாத நடத்தை முதலிய சங்கைக் குறைகளுக்குப் பரிகாரமாக, சத்துவகரென்னும் சம்மனசுக்கள் தேவரீரை வணங்குகிற அத்தியந்த தாழ்ச்சி பொருந்தின நமஸ்காரங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.


நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.