தேவா உன் பதம் அமர்ந்து ஒரு வரம் கேட்டு நின்றோம்


தேவா உன் பதம் அமர்ந்து

ஒரு வரம் கேட்டு நின்றோம்

நாதா உன் அமைதியைத் தந்திடுவாய்

உன் தாள் சரணமய்யா


1. உன் கையில் என் பெயர் பொறித்து

கண்ணென எனைக் காப்பாய்

சிறகுகளால் என்னை அரவணைப்பாய்


2. அன்பால் அக இருள் களைய

உன்னொளி தந்திடுவாய்

நம்பினேன் உனையே இறையவனே