காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய் படைத்தவா பணிகின்றேன் பரமனே புகழ்கின்றேன்


காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய்

படைத்தவா பணிகின்றேன் பரமனே புகழ்கின்றேன்

குயவன் நீயே களிமண் நானல்லவா

குன்றாத உனது மகிமை நான் சொல்லவா

இறைவனே ஆகட்டும் உம் உளமே


1. அழகான உலகம் அதில் ஒரு மனிதம்

அன்பாக நீ படைத்தாய்

அனைவரும் மகிழ்ந்து ஆனந்தம் பகிர்ந்து

அமைத்திட நீ பணித்தாய்

எல்லாமே உமதன்றோ என்றே யாம் உணர்ந்தோம்

வல்லவா உம் கையில் யாம் கொணர்ந்தோம்

உம் சித்தமே நிறைவேறுக

உம் திட்டமே எங்கும் நிறைவாகுக


2. சூடாத மலரும் சுவைக்காத உணவும்

கையிலே பயன் என்ன

காய்க்காத மரமும் கனியில்லா கொடியும்

காய்ந்தும் இழப்பென்ன

எம் வாழ்வின் பொருளாக உம் மீட்பின் அருளாக

உம் கையில் எம்மை யாம் கொடுத்தோம்