ஆகாயம் உம்மைப் புகழ்கின்றதே என் ஆன்மாவும் உம்மைத் துதிக்கின்றதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆகாயம் உம்மைப் புகழ்கின்றதே

என் ஆன்மாவும் உம்மைத் துதிக்கின்றதே (4)

புகழ்கின்றதே உம்மைத் துதிக்கின்றதே - 2

என் தெய்வமே உம்மைத் துதிக்கின்றதே - 2


1. கதிரவன் உம்மைப் புகழ்கின்ற வேளை - 2

சிரித்திடும் மலர்களும் புகழ்கின்றதே - 2 (ஆகாயம்)


2. சந்திரன் உம்மைப் புகழ்கின்ற வேளை - 2

தளிர்விடும் கொடிகளும் புகழ்கின்றதே - 2 (ஆகாயம்)