தேவன் மகன் முள்முடி சுமந்தார் இவரல்லவா அருள்நாயகன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தேவன் மகன் முள்முடி சுமந்தார்

இவரல்லவா அருள்நாயகன்

பொன்மேனி வண்ணம் செந்நீரிலே

தள்ளாடிச் செல்லும் இந்நாளிலே

காணும் யாரும் கண்ணீரிலே


1. பிறர் பாவம் என்றும் தாங்காது நெஞ்சம்

அடிவாங்குமோ புவி தாங்குமோ

தாய் ஈன்ற பிள்ளை தவிக்கின்ற வேளை

தாய்மேரி திருவுள்ளம் தடுமாறுமோ

சிலுவையின் சுமையோ

தாங்கும் தோள்தான் புண்ணாகுமோ


2. மழைமேகம் வானும் இடிமின்னல் காற்றும்

அழுகின்றதோ தொழுகின்றதோ

தேவாதி தேவன் தெய்வீக ஜீவன்

பலிபீடம் தனை நோக்கி வருகின்றதோ

கருணையின் வடிவே

காக்கும் எங்கள் அன்பு இயேசுவே