பூசைக்குப் பின் குருவானவர் பீடத்தினடியில் சொல்லும் செபங்கள்

மூன்று பிரியதத்த மந்திரம்

கிருபைதயாபத்து மந்திரம்

கிருபைதயாபத்திற்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் சீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மை நோக்கிப் பெரு மூச்சுவிடுகிறோம். ஆதலால் எங்களுக்காகவேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாபமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசங் கடந்த பிற்பாடு, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய சேசு நாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்பமுள்ள கன்னி மரியாயே.

சேசு கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக

சர்வேசுரனுடைய பரிசுத்த தேவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

எங்கள் அடைக்கலமும் பலமும் ஆகிய சர்வேசுரா! உம்மை நோக்கிக் கூப்பிடுகிற ஜனங்களின் பேரில் கிருபா நோக்கம் பாலித்தருளும். அன்றியும் மகத்துவம் பொருந்திய அமலோற்பவ கன்னியும் தேவ தாயாருமாகிய அர்ச். மரியம்மாள், அவளுடைய பத்தாவாகிய முத்திப்பேறுப்பெற்ற அர்ச். சூசையப்பர், உமது அப்போஸ்தலர்களாகிய முத்திப்பேறுபெற்ற அர்ச் இராயப்பர், சின்னப்பர் முதலிய சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய மன்றாட்டு களுக்குத் தேவரீர் திருவுளம் இரங்கி, பாவிகள் மனந் திரும்புவதற்காகவும் நமது தாயாகிய திருச்சபை சுயாதீனம் பெற்றுத் தழைத்தோங்குவதற்காகவும் நாங்கள் செய்து வருகிற செபங்களைக் கிருபைதயாபத்தோடு கேட்டருளும் சுவாமீ, ஆமென்.

அதி தூதரான அர்ச். மிக்கேலே, போராட்டத்திலே எங்களைத் தயாபரியும், பசாசின் வஞ்சகத் தந்திரங்களிலே எங்களை ஆதரியும். அந்த மாற்றானுக்குச் சுவாமி தண்டனையிட தேவரீரைக் கெஞ்சி மன்றாடுகிறோம். அன்றியும் வானோர் சேனாதிபதியாகிய சம்மனசானவரே, ஆத்துமங்களைக் கெடுக்க இப் பூவுலகில் திரிந்தலைகின்ற சாத்தானையும் மற்றுமுள்ள துன்மன அரூபிகளையும் தேவரீர் திவ்விய பலத்தைக் கொண்டு நரகத்திலே தள்ளிவிட்டருளும் ஆமென்.

சேசுவின் திரு இருதயமே எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமீ (3 முறை).