மகா அதிசயங்களைச் செய்கிறவராகிய சர்வ வல்லமையுள்ள நித்திய சேசுவே, எங்கள் குருமார்கள் பேரிலும் அவர்கள் விசாரணைக்கு ஒப்புவிக்கப்பட்ட எல்லாச் சபைகள் பேரிலும் ஆரோக்கியம் தருகிற உம்முடைய கிருபையுள்ள இஸ்பீரித்து சாந்துவை அனுப்பி, அவர்கள் உமக்கு உத்தம பிரியமானவர்களாக நடக்கும்படி உமது ஆசீர்வாதமாகிய பனி அவர்கள் மேல் ஓயாமல் பெய்யச் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்கள் ஆண்ட வராகிய சேசு கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும், ஆமென்.