♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது
இயேசு உயிர்த்தார் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1. விதைக்கப்படுவது அழிவுக்குரியது
உயிர்த்து எழுவது அழியாதது
புதைக்கப்பட்டதோ வலுவற்றது
உயிர்த்து எழுவதோ வலுவானது
மண்ணில் விழுந்து மடியும் விதைகள்
எழுந்த போது தருமே பலன்கள்
2. அழிவுப் பாதைகள் சாவின் மேடுகள்
அன்பின் ஆட்சிகள் உயிர்ப்பின் வாசல்கள்
பாவம் என்பது இருண்ட மேகங்கள்
திருந்தி வாழ்வது நீல வானங்கள்
பாவம் மறந்து பாதை திருத்து
உயிர்ப்பு வாழ்வே நமது விருந்து
3. மனித வாழ்வுகள் சிறிது காலங்கள்
அன்புப் பாதையில் நடந்து வாருங்கள்
துன்பம் என்பது நீரின் குமிழிகள்
தொடர்ந்த போதிலும் சுமந்து வாருங்கள்
இருக்கும் வரைக்கும் சுமந்து செல்வோம்
உயிர்ப்பு வாழ்வில் இறக்கி வைப்போம்