சுவாமீ கிருபையாயிரும். மற்றதும் - தீர்த்தம் - பர.
சுவாமீ! தேவ திருவுளத்தைப் பக்தியோடு அங்கீகரித்திருந்த இவர் தன் குற்றங்களுக்கேற்புற ஆக்கினையை அனுபவியாமல் மன்னிப்பை அடையவும், வானோர்களோடு மோட்ச இராச்சியத்தில் நிரந்தரம் உமக்கு ஸ்துதிபுரியவும், மரித்த உம்முடைய அடியானாகிய இவருக்கு கிருபை கூர்ந்தருள வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுகளை எல்லாம் சேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும், ஆமென்.