என்றும் வாழும் சொந்தம் ஒன்று எந்தன் வாழ்வில் வேண்டும் என்று

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்றும் வாழும் சொந்தம் ஒன்று

எந்தன் வாழ்வில் வேண்டும் என்று

ஆசையோடு அங்கும் இங்கும் தேடினேன்

என்னை நீயும் தேர்ந்து கொண்ட

நேசம் கண்டு மயங்கினேனே

இன்றும் என்றும் நான் உனக்கு சொந்தமே


1. தனித்துச் செல்லும் பயணம் எந்தன் வாழ்க்கையில்

தாயைப் போல அருகிருந்து தாங்கிடு

தவறுகின்ற தருணம் வரும் பொழுதினில்

காவல் தெய்வமாக நின்று காத்திடு

நீ நடந்த பாதையை மறந்திடேன்

தியாக வேள்வியாகவும் தயங்கிடேன்

இன்று நாளே இன்றும் என்றும்

இந்த சொந்தம் மாறிடாது

எந்நாளும் நான் உனக்கு சொந்தமே


2. பணம் பதவி மோகம் என்ற போதையில்

விழுந்திடாத விழிப்பு தந்து பார்த்திடு

பயணம் தன்னில் சோர்வு மூளும் காலையில்

உறுதியூட்டும் தோழமை விரித்திடு

எங்கும் இருள் சூழ நேர்ந்து போயினும்

அகவிளக்கு அணைந்திடாமல் காத்திடு

இன்று நாளே என்றும் இன்றும்

நமது சொந்தம் மாறிடாது

எந்நாளும் நான் உனக்கு சொந்தமே