♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆண்டவரே அன்பான தேவனே உமக்கே ஆராதனை
ஆராதனை ஆராதனை எங்கள் இயேசு இராஜா உமக்கே
1. கல்வாரி நாயகனே உமக்கே ஆராதனை
கண்மணி போல் காப்பவரே உமக்கே ஆராதனை
காலங்களைக் கடந்து வாழ்பவரே
கண்ணை மூடிக் கரம் குவித்து ஆராதனை
2. அடைக்கலம் தருபவரே உமக்கே ஆராதனை
அருள்மழை பொழிபவரே உமக்கே ஆராதனை
ஆயிரமாய் அற்புதம் செய்பவரே
சிரம் தாழ்த்தி தாள் பணிந்து ஆராதனை
3. இனிமை தரும் இனிய நேசரே உமக்கே ஆராதனை
எங்களின் இதய தெய்வமே உமக்கே ஆராதனை
உயிரின் உயிராய் இருப்பவரே
புத்தம் புது கீதங்களால் ஆராதனை