♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களுக்கு
இறைவன் ஆசீரளிப்பார்
1. ஆண்டவர்க்கஞ்சும் நீ பேறுபெற்றோன் - அவர்
காட்டிய வழியில் நீ நடப்பாய்
உழைப்பால் நீ உந்தன் உணவைக் கொள்வாய்
எல்லாம் உனக்கு நலமாகும்
2. மக்களின் மக்களைக் காண்பீராக - உங்கள்
வாழ்வினில் அமைதி நிலவிடுக
இறைவன் தரும் நல் சமாதானம்
என்றென்றும் உங்களில் நிலைத்திடுமே