மழலை மொழிகள் சொன்னாலென்ன மனிதன் கொண்ட இறைமொழியே


மழலை மொழிகள் சொன்னாலென்ன

மனிதன் கொண்ட இறைமொழியே

மகிழ்வின் வழியை சொன்னாலென்ன

மரியிடம் பிறந்த தலைமகவே


1. தொடர்புகளால் சிறு கிராமமாக

இந்தத் தரணி மாறிவிட்டதே - ஆனால்

சாதி சமயம் என்ற பேதங்களால்

சிறு ஊரும் பிரிந்து நிற்குதே

சாதியை ஒழித்து சமத்துவம் காண

மதங்களைக் கடந்து மனிதத்தைத் தேட

மனிதனாய் பிறந்த இறைமகனே

எங்கள் மனங்களில் பிறந்திடுவாய்

உனது பிறப்பில் உண்மை புரிகிறது

புது உலகம் பிறக்கும் என்று தெரிகிறது


2. அறிவியலில் புதுப்பொருட்கள் சந்தைகளில்

அதிசய நோய்களோ வீடுகளில் - கொடும்

வன்முறையோ இன்னும் ஓயவில்லை

எங்கள் வறுமை மாறவில்லையே

உண்மையும் நீதியும் உலகினில் ஓங்கிட

என்னுடன் கைகோர்த்து இயற்கையும் வாழ்ந்திட

ஐம்பெரும் பொருளுடல் தாங்கியவா

உண்மை அமைதிக்கு வழியினைத் தா