அன்னை உன் ஆசி வேண்டியே அன்போ டெழுவீர் இவ் வீட்டிலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்னை உன் ஆசி வேண்டியே

அன்போ டெழுவீர் இவ் வீட்டிலே

என்றென்றும் கூடி பண் கீதம் பாடி

உன் பாதம் நாடினோம்

கன்னியே சதா முன் சொன்ன சொல்லிலே பிதா

என்றென்றும் எமக்கே தந்த தாயே மாமரி


1. விஞ்ஞானம் என்ற பேரிலே - அழி

வஞ்ஞானம் சேர் புவிப் போரிலே

எஞ்ஞான்றும் நீயே மெய்ஞான ஜோதி

அம்மா எம் இராக்கினி


2. கலையின் பேரால் மானமே

கொலையுண்டேகும் ஈனமே

காணக் கண் கூச காட்சி நீ பேச

கண்டோம் தஸ்நேவிஸ் சாட்சி


3. பங்கமில் தூய தங்கம் நீ

தங்க வான்வீட்டின் இராக்கினி

இங்கு எம் இல்லம் தங்கிடும் உள்ளம்

பொங்கும் மங்களம் ஆளும்