கோடி நன்றி பாடல் பாடும் எந்தன் இதயமே காக்கும் நல்ல தேவன் அன்பு என்னை தாங்குமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கோடி நன்றி பாடல் பாடும் எந்தன் இதயமே

காக்கும் நல்ல தேவன் அன்பு என்னை தாங்குமே

அவரின் கரங்கள் எனது வாழ்வில் என்றும் இணையுமே

அகமகிழ்ந்து அவரைப் போற்றி நிதமும் பாடுவேன்

நன்றி இறைவா நன்றி தலைவா


1. எனது ஆற்றல் அரணுமான உம்மை வாழ்த்துவேன்

எனது மீட்பும் மகிழ்வுமான உம்மைப் புகழுவேன்

எனது வளமை வாழ்வுமான உம்மைப் போற்றுவேன்

எனது வலிமைத் துணிவுமான உம்மைப் பாடுவேன்


2. கண்ணின் இமைகள் போல என்னைக் காத்து மகிழ்கின்றீர்

கருணை கொண்ட விழிகளாலே இரக்கம் பொழிகின்றீர்

அள்ள அள்ளக் குறையாத அன்பைத் தருகின்றீh

அன்னைக்கும் மேலான பாசம் பொழிகின்றீர்