♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
சென்று வா கிறிஸ்தவனே - உலகை
வென்று விட்டாய் நீ விசுவாசத்தால்
1. உற்றார் உறவினர் நண்பரெல்லாம்
சுற்றி நின்று வழியனுப்ப
உற்ற துன்பத்தில் ஆறுதலாய்
உதவும் திருச்சபை அருகிருக்க
2. இறைவனின் புனிதரே துணை வருவீர்
தேவனின் தூதரே வந்தழைப்பீர்
அடியார் ஆன்மா ஏற்றிடுவீர்
ஆண்டவர் திருமுன் சேர்த்திடுவீர்
3. படைத்த தந்தை உனை ஏற்பார்
மீட்ட திருமகன் உனைக் காப்பார்
அர்ச்சித்த ஆவியும் உனைச் சூழ்வார்
அனைத்துப் புனிதரும் உனைச் சேர்வார்
4. நித்திய அமைதியில் சேர்ந்திடுவாய்
நீடித்த ஒளியில் வாழ்ந்திடுவாய்
ஆண்டவர் எமையும் அழைக்குங் கால்
அவரோ டுன்னையும் சந்திப்போம்