ஆமென் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா ஆமென் அல்லேலூயா ஜெயம் ஜெயம் அனந்த ஸ்தோத்திரா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆமென் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா

ஆமென் அல்லேலூயா ஜெயம் ஜெயம் அனந்த ஸ்தோத்திரா

தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்

துயிர்த்தெழுந்தாரே உன்னதமே


1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே

தாளத்தைச் சங்கரித்து - முறித்து

பத்ராசனக் கிறிஸ்து - மரித்து

பாடுபட்டுத் தரித்து முடித்தார்


2. சாவின் கூர் ஓடிந்து - மடிந்து

தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து

ஜீவனே விடிந்து - தேவாலயத்

திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது


3. வேதம் நிறைவேற்றி - மெய் தோற்றி

மீட்டுக் கரையேற்றி - பொய் மாற்றி

பாவிகளைத் தேற்றி - கொண்டாற்றி

பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்