இயேசு இரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசு இரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே - அவர்

இதயத்தோடு கலந்துவிட்டால் எல்லாம் கிடைக்குமே


1. வாடிக் கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே - அவர்

வாழ்வு சத்யம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே


2. பரமபிதா ஒருவர் என்று வகுத்துச் சொன்னவர் இயேசு

பாசம் அன்பு கருணையோடு உலகைக் கண்டவர் இயேசு


3. எதையும் தாங்கும் சகிப்புத்தன்மை வேண்டும் என்றவர் இயேசு-நம்

எல்லோருக்கும் இறைவனாக விளங்கி நின்றவர் இயேசு


4. தீமை வளரும் எண்ணந்தன்னை அறுத்துக் கொண்டவர் இயேசு

தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு