திரிகாலச் செபம்

ஆண்டவருடைய சம்மனசானது மரியாயுடனே விசேஷஞ் சொல்லிற்று; அவளும் இஸ்பிரீத்துசாந்துவினாலே கர்ப்பிணியானாள், - ஒரு அருள். 

இதோ ஆண்டவருடைய அடிமையானவள்; உம்முடைய வார்த்தையின்படியே எனக்காகக்கடவது. - ஒரு அருள். 

வார்த்தையானது மாம்ஸமாகி; எங்களுடனே கூட வாசமாயிருந்தது. ஒரு அருள்.

முதலோதி,  சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங் களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.

துணைவர்.  சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமீ, சம்மனசு சொன்னதினாலே உமக்குக் குமாரனாகிய சேசுகிறிஸ்து மனுஷனானதை அறிந்திருக்கிற நாங்கள், அவருடைய பாடுகளினாலேயும் சிலுவையினாலேயும் உத்தானத்தின் மகிமையை அடையத்தக்கதாக எங்களுக்கு அநுக்கிரகம் செய்தருளுவேண்டுமென்று தேவரீரை வேண்டிக் கொள்ளுகிறோம். இந்த மன்றாட்டுகளை எல்லாம் சேசுகிறீஸ்து நாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.  ஒரு பர.

* மணி அடிக்கும்போது இதை உண்மையான துக்கமனஸ்தாபத்துடனே செபிக்கவும். மேலும் இதைச் சனிக்கிழமை சாயந்திரந் துவக்கி ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் வரைக்கும் நின்று கொண்டு செபிப்பதே முறை. (13-ம் பெனதிக்து , 4.9.1724; 20.4.1727).