இதய யாழில் சுரம் இசைத்து புகழ்ந்து பாடுங்கள் - தேவன் இணையில்லாத செயலுக்காக நன்றி கூறுங்கள்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இதய யாழில் சுரம் இசைத்து புகழ்ந்து பாடுங்கள் - தேவன்

இணையில்லாத செயலுக்காக நன்றி கூறுங்கள்


1. வாழ்வு முழுதும் வழியைக் காட்டி தோழனாகினார் - என்

தாழ்வை நீக்கி ஏழ்மை போக்கி பக்தனாக்கினார்

உருகும் மெழுகாய் என்னை மாற்றி தீபம் ஏற்றினார்

உன் வேதம் சொல்ல பேதை என்னை கருவியாக்கினார்


2. மனிதர்களைப் புனிதராக்க மனிதனாகினார் - இந்த

அடிமைகளும் உரிமைப் பெற குரல் கொடுக்கின்றார்

இருள் சூழ்ந்த மனித வாழ்வில் ஒளியை ஏற்றினார்

இந்த உலகம் எங்கும் பொதுமை வளர புதுமை செய்கின்றார்