அகிலம் ஆள்பவா அன்பின் நாயகா அனைத்தும் ஆக்கும் அறிவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அகிலம் ஆள்பவா அன்பின் நாயகா அனைத்தும் ஆக்கும் அறிவே

ஆதாரமாய் ஆத்ம ஜோதியாய் ஆன அறிவின் நிறைவே

தடுமாறும் பொழுதில் தாங்கிடும் நேசமாய்

தாயாகி நின்றாயே ஒரு கணமும் உனை மறவேன்


1. ஊரறியாமல் உலகறியாமல்

நான் வலி சுமந்த நாட்களில்

நானறியாமலே என் நண்பனாகினாய்

சுமைகள் தாங்கினாய்

பூவாக என்னை மலரவும் வைத்தாய்

புன்னகையும் தந்தாய்

நீங்காது எந்தன் நிழல் போல் நீயும்

நிதமும் அருகில் இருந்தாய் என் செல்வமே


2. நிலவில் கருமை போல் நிறைவும் குறைகளும்

என் வாழ்வு காணும் காட்சிகள்

தேடுவேன் வந்து நீ

என்னை ஆட்கொண்டு முழுமையாக்கிடு

துயருறும் மானுடம் ஆறுதல் பெறவே

அர்ப்பணிப்பேன் என்னை

ஆதாரமாகும் அருளால் என்னைக்

காத்து நிதமும் நடத்து என் செல்வமே