என்னை நீ நேசிக்க என்னிடம் இருப்பது என்னவென்றெனக்குக் கூறிடுவாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னை நீ நேசிக்க என்னிடம் இருப்பது

என்னவென்றெனக்குக் கூறிடுவாய்

இயேசுவே எனக்குக் கூறிடுவாய் (2)


1. சேய்தனில் எத்தனை குறையிருந்தாலும்

தாயதை அன்பு செய்வதும் ஏனோ?

பேயெனக் கடலில் புயல் வந்தாலும்

தூய ஆறதில் பாய்வதும் ஏனோ?

எத்தனை குறைகள் எனக்கு இயேசுவே

அத்தனை பொறுத்து அன்பு செய்தாயே


2. நீரினில் எத்தனை சேறிருந்தாலும்

தாமரை அங்கு மலர்வது ஏனோ?

பாரினில் எத்தனை பாவிகள் இருக்க

கார் மழை அங்குப் பொழிவதும் ஏனோ?

அருளுக்கு அருகதை இல்லேன் எனினும்

அருளால் என்னை நீ ஆட்கொண்டனையே