♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
காவியம் பாடிடுவேன் காலமும் வாழ்வினிலே
இயேசுவின் அன்பினையே - இறைமகன்
இயேசுவின் அன்பினையே
இதயமெல்லாம் மகிழ்ந்திடவே கீதம் பாடிடுவேன்
1. சொந்தம் பந்தம் எல்லாம் வாழ்வில் மாறுமே
நெஞ்சில் வாழும் இயேசு மாறா தெய்வமே
அதை நினைப்பதினால் நன்றியுடன் கீதம் பாடிடுவேன்
2. என்னைத் தேடி வந்தார் அன்பாய் தேவனே
என்றும் என்னை காக்கும் தெய்வம் இயேசுவே
அதை உள்ளத்திலே உணர்வதினால் கீதம் பாடிடுவேன்