நமது தேவன் வருகின்றார் இந்த விருந்திலே அவரின் அன்பைத் தருகின்றார் நம் வாழ்விலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நமது தேவன் வருகின்றார் இந்த விருந்திலே

அவரின் அன்பைத் தருகின்றார் நம் வாழ்விலே

தெய்வீக உணவு தேன் சிந்தும் மருந்து


1. அழிவில்லாத உணவு இது வானக விருந்து

இது அலையும் மனதில்

அமைதி அளிக்கும் ஆறுதல் அமுது

முடிவில்லாத வாழ்வைத் தரும் அழியா மருந்து

நம் உறவு வாழ்வில்

நிறைவை அளிக்கும் தேவனின் விருந்து

இனிய விருந்திது அன்பின் மருந்திது

தியாக ஒளியிது தீரா உணவிது


2. இரக்கம் நிறைந்த இதயம் திறந்து

நம்மில் வருகின்றார்

கலக்கம் மிகுந்த பிளவு வாழ்வில்

அன்பைப் பொழிகின்றார்

பாவ வாழ்வைப் போக்கியே நல்

பாதை அமைக்கின்றார்

பரந்து விரிந்த உலகில் வாழத்

தம்மைத் தருகின்றார்

படைப்புகள் யாவுமே இறைவனைப் போற்றுமே

அவரது உறவிலே என்றுமே வாழுமே