கோதுமை மணிகள் மண்ணில் மடிந்து பலன்கள் தந்திடுமே மடியும் மணிகள் விண்ணில் பிறந்து என்றும் வாழ்ந்திடுமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கோதுமை மணிகள் மண்ணில் மடிந்து பலன்கள் தந்திடுமே

மடியும் மணிகள் விண்ணில் பிறந்து

என்றும் வாழ்ந்திடுமே


1. உதவும் பண்பை இதயம் வளர்த்தால்

உறவில் கரம் சேரும்

உறவின் தீபம் இரவில் எரிந்தால்

உலகம் கரை சேரும்


2. இல்லை என்ற சொல்லும் மறைந்தால்

ஏழ்மை நீங்கி விடும்

ஏழ்மையில்லா புதிய வீடே இறைவன் வீடாகும்