என் சர்வேசுரா! நான் தேவரீருக்குச் செய்த பாவத் துரோகங்களை எல்லாம் தேவரீருடைய திருச் சமூகத்திலே சங்கீர்த்தனம் செய்கிறேன். நான் என் சிந்தனை வாக்குக் கிரியை களினால் அநேகப் பாவத் தோஷங்களைக் கட்டிக் கொண்ட படியினாலே, கன்னியர் எல்லாரும் தூய்மையான பரிசுத்தக் கன்னியாகிய அர்ச். மரியாயி சகல அர்ச்சியசிஷ்டவர்கள் எல்லா விசுவாசிகள் இவர்கள் முன்பாக, என் பாவங்களை எல்லாம் வெளிப்படுத்துகிறேன். என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே, ஆகையால் எப்பொழுதும் கன்னியாகிய அர்ச். மரியாயையும், சகல அர்ச்சியசிஷ்டவர்களையும், எனக்காக ஆண்டவரே! தயையோடு என் மனறாட்டைக் காது கொடுத்துக் கேட்டுப் பாவ விமோசனமும் பொறுத்தலும் இஷ்டப்பிரசாதமும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன், சுவாமீ.