உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார் சாவினை வென்றிட உயிர்த்தெழுந்தார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார்

சாவினை வென்றிட உயிர்த்தெழுந்தார்

அல்லேலூயா ஆனந்தமே - 4


1. பாறை பிளந்திடும் அனல் பிளம்பாய்

கல்லறை திறந்தே உயிர்த்தெழுந்தார் (2)

விண்ணக வாயிலும் திறக்கின்றதே -2

இறைவன் அரசிங்கே தொடர்கின்றதே

தீமைகள் விரட்டிட எழுந்திடுவோம்

நம் அன்பரின்போர்களை தொடர்ந்திடுவோம்

வெற்றி நமதென முழங்கிடுவோம்

இயேசுவின் உயிர்ப்பை மலரச் செய்வோம்


2. மானிட வாழ்க்கையின் கொடுமுடியால்

மாபரன் இயேசுவே உயிர்த்தாரே (2)

போரிடும் ஏழைகள் ஆற்றலுமாய் -2

செல்வரின் செருக்கினை உடைத்தாரே

சோர்ந்திடும் வறியவர் நம்பிக்கையின் இன்று

விடியலின் விளக்காய் துலங்கிடுதே (2)

உண்மை நிலையாய் ஆள்கின்றதே அன்பின் நீதியும் கனிகின்றதே