♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
கிருபை தயாபத்தின் மாதாவாய்
இருக்கின்ற இராக்கினியே வாழ்க
வாழ்க வாழ்க மாதாவே வாழ்க வாழ்க மாதாவே
1. எமதுயிர் தஞ்சமும் நீயாமே
எமது நல் மதுரமும் நீயாமே
2. பரதேச ஏவையின் மக்கள் யாம்
பரிவாக உம்மை யழைக்கின்றோம்
3. இந்தக் கண்ணீர் கணவாய் நின்று
உம்மையே நோக்கி யழுகின்றோம்
4. ஆதலின் எமக்காக வேண்டுகின்ற
மா தயை மாமரி விழி பாராய்
5. பரதேச மிதையாம் கடந்த பின்னர்
திருக்கனி சேசுவின் முகங்காண்பி
6. கிருபாகரியே தயாபரியே
மரியே மதுரமா கன்னிகையே