ஜீவிய நாள் முழுதும் ஆவி சோரும் பொழுதும்
தேவனே இயேசுவே எம் ஜீவ ஒளியாயிரும்
ஆசீர் தந்தருள்வீர் திவ்ய இயேசுவே
அன்பால் எம் இதயம் தகனமாக்கும்
ஆண்டவரே தேவனே எம் தஞ்சமாயிரும்
1. தீங்குசூழ் பூவின் மைந்தர் ஓங்கும் வினையகல
பூங்காவில் இரத்தம் வேர்த்து ஏங்குவீர் தேவ மைந்தர்
2. கோரமாய் அடிபட்டு மரணத்தீர்வை பெற்று
பாரச்சிலுவை தாங்கி தூர வழி நடந்தீர்
3. யூதாஸ் என்னும் சீடனால் யூதர் கை சிறைப்பட்டு
அன்னாஸ் கைப்பாஸின் முன்னால் அநேக நிந்தை பட்டீர்